• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

“ரூ.16,500 கோடியாக உயர்ந்த ரூ.450 கோடி முதலீடு” – ஆர்.சி.பி., ராஜஸ்தான் அணிகளின் மதிப்பு என்ன?

Byadmin

Mar 29, 2026


விராட் கோலி- அஜிங்க்யா ரஹானே

பட மூலாதாரம், Vishal Bhatnagar/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, 2019 ஏப்ரல் 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ஆர்சிபி கேப்டன் விராட் கோலியும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவும் உள்ளனர்.

உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்-லில் , முதல் முறையிலேயே சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தற்போதைய வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் அதன் நிர்வாகக் குழுவான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இது தொடர்பான செய்திகள் இந்திய ஊடகங்களில் பரவி வருகின்றன.

ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான ஆர்சிபி அணியை வாங்கிய கூட்டமைப்பின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 16,500 கோடி ரூபாய் (1.78 பில்லியன் டாலர்) ஆகும்.

இதற்கிடையில், அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.63 பில்லியன் டாலருக்கு வெற்றிகரமாக வாங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

ரூ.16,500 கோடியாக மாறிய ரூ.450 கோடி முதலீடு

 ஆர்சிபி அணி

பட மூலாதாரம், Pankaj Nangia/Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் 2025 சீசனின் வெற்றியாளராக ஆர்சிபி அணி திகழ்கிறது.

ஆர்சிபி அணியை வாங்கிய ஆதித்ய பிர்லா குழுமத்தின் இணையதளத்தின்படி, “ஆதித்ய பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பிஎக்ஸ்பிஇ ஆகியவை ஆர்சிபியின் உரிமையைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.”

By admin