• Tue. Jan 13th, 2026

24×7 Live News

Apdin News

ரெசாங் லா போர்: மறக்கப்பட்ட இந்தியா – சீனா போரை நினைவூட்டும் புதிய பாலிவுட் திரைப்படம்

Byadmin

Jan 13, 2026


ரெசாங் லா போர், 1961 இந்தியா - சீனா போர், 120 பகதூர்

பட மூலாதாரம், 120 Bahadur team

படக்குறிப்பு, மேஜர் ஷைத்தான் சிங்காக நடிகர் ஃபர்ஹான் அக்தர்

சமீபத்திய பாலிவுட் திரைப்படம் ஒன்று, 1962-ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த போரில் மறக்கப்பட்ட ஒரு போர்க்களத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

‘120 பகதூர்’ என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்தி மொழியில் ‘பகதூர்’ என்றால் ‘வீரர்கள்’ என்று பொருள். லடாக்கின் கடும் குளிரான இமயமலைப் பகுதியில் உள்ள ‘ரெசாங் லா’ கணவாயைப் பாதுகாக்க தீரத்துடன் போராடிய இந்திய வீரர்களின் கதையை இத்திரைப்படம் சொல்கிறது.

மேஜர் ஷைத்தான் சிங்காக ஃபர்ஹான் அக்தர் நடித்த இந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தியா தோற்ற ஒரு போரில் ‘ஒரே ஒரு நம்பிக்கையாக’ விவரிக்கப்படும் ஒரு போர்க்களத்தைப் பற்றிப் பேசியதில் வெற்றி பெற்றுள்ளது.

“இக்கதையைச் சொல்வது மிகவும் முக்கியம் என்று நாங்கள் கருதினோம், நிஜ வாழ்வில் இந்தப் போராட்டத்தை எதிர்கொண்ட வீரர்களை நாங்கள் கௌரவிக்க விரும்பினோம்,” என்று பிபிசியிடம் தெரிவித்த வசனகர்த்தா சுமித் அரோரா, “நாங்கள் சில சினிமா சுதந்திரங்களை எடுத்துக் கொண்டாலும், எங்கள் திரைப்படம் வரலாற்று உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது”என்று கூறினார்.

By admin