• Fri. Apr 4th, 2025

24×7 Live News

Apdin News

‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக நிறைவு

Byadmin

Apr 3, 2025


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யாவின் 2 டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.

இப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் படத்துக்கான டப்பிங் பணிகள் அனைத்தையும் நடிகர் சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார்.

இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

By admin