• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை

Byadmin

Dec 19, 2025


சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பெண்கள் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

By admin