• Mon. Dec 15th, 2025

24×7 Live News

Apdin News

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை – இது சாத்தியமா?

Byadmin

Dec 14, 2025


ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது சாத்தியமா? உணவுத்துறை அமைச்சர் கூறுவது என்ன?

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டுமென்று பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

சோதனை அடிப்படையில் நான்கு மாவட்டங்களில் உள்ள 14 தாலுகாக்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படுமென்று தமிழக அரசு உறுதியளித்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திட்டம் துவக்கப்படவில்லை என்று விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால் “தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் கைவிடப்படவில்லை, அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்கு தனியாக நிதி தேவையில்லை” என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2.28 கோடி குடும்ப அட்டைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, “மாநிலம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 63 ஆயிரம் குடும்பதாரர்கள், தங்களுக்கு எந்தப் பொருட்களும் வேண்டாமென்று கூறி அதற்குரிய அட்டைகளைப் (No Commodity) பெற்றுள்ளனர்.

மொத்தம் 3 லட்சத்து 85 ஆயிரம் குடும்பங்கள் சர்க்கரை முன்னுரிமை அட்டைகளைக் கொண்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அனைத்துமே அரிசி குடும்ப அட்டைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.”

By admin