• Sun. Apr 5th, 2026

24×7 Live News

Apdin News

ரோகித் ஷர்மாவை அட்டாக் செய்து பந்து வீசிய அக்‌ஷர் பட்டேல் – மும்பையை டெல்லி அணி வென்றது எப்படி?

Byadmin

Apr 5, 2026


தொடர்கிறது ரிஸ்வியின் ஆதிக்கம்... மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Images

படக்குறிப்பு, இந்த சீசனின் ஆரஞ்ச் கேப் தற்போது சமீர் ரிஸ்வி வசம் இருக்கிறது (கோப்புப் படம்)

டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதை 18.1 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது அக்‌ஷர் பட்டேலின் அணி.

முந்தைய போட்டியில் அரைசதம் அடித்து டெல்லியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக விளங்கிய சமீர் ரிஸ்வி, இந்தப் போட்டியிலும் அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பௌலர்களை சிறப்பாகப் பயன்படுத்திய அக்‌ஷர்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த டெல்லி கேப்டன் அக்‌ஷர் பட்டேல் களத்தில் சிறப்பான முடிவுகளை எடுத்தார். அதனால் பவர்பிளேவில் அந்த அணியின் கை சற்று ஓங்கியிருந்தது.

மூன்றாவது ஓவரில் ரியான் ரிக்கில்டன், திலக் வர்மா என இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் முகேஷ் குமார். அதன்பிறகு இரண்டு வலது கை பேட்டர்கள் களத்துக்குள் வந்ததும் அக்‌ஷர் பட்டேல் தானே நான்காவது ஓவரைப் பந்துவீச வந்தார்.

By admin