14 வயதில் திருமணம், இன்றோ உலக பாடிபில்டிங் சாம்பியன் – இந்த ஆப்கன் பெண் சாதித்தது எப்படி?
ரோயா கரிமி- பல விருதுகளை வென்ற இந்த பாடிபில்டருக்கு, 14 வயதில், ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணம் நடந்தது. அதன் பிறகு 15 வயதில் ரோயா கரிமிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
ஒரு கட்டத்தில் அங்கிருந்து தனது மகனுடன் தப்பிய அவர், இப்போது நார்வேயில் வசிக்கிறார். 14 வருடங்கள் கடந்தபிறகு, இப்போதும் ரோயாவின் மகன் அவருக்கு துணையாக நிற்கிறார்.
தனது கதை, ஒடுக்கப்பட்ட ஆப்கன் பெண்களுக்கு உதவும் என ரோயா நம்புகிறார்.
ரோயா இப்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்கிறார். மேலும் தனது வெற்றி மூலம் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட ஆப்கன் பெண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்.
“இன்று ஆப்கானிஸ்தானில் பெண்கள், ஆண் துணை இல்லாமல் பள்ளிக்கோ அல்லது வெளியே கூடச் செல்ல முடியாத அளவுக்கு அவர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு ஆப்கானிய பெண்ணுக்கும் பரிட்சயமான சவால்கள் மற்றும் தடைகளை நான் என் வாழ்க்கை போராட்டங்களில் எதிர்கொண்டேன்” என்கிறார் ரோயா.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு