காணொளி: 14 வயதில் குழந்தை திருமணம் – தப்பிச் சென்று பாடி பில்டர் ஆன ஆப்கன் பெண்
விருதைப் பெறும் இந்த பெண் பாடி பில்டர், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்.
ரோயா கரிமிக்கு 14 வயதாக இருக்கையில் அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. 15 வயதாக இருக்கும்போது அவர் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார்.
மகனுடன் அங்கிருந்து தப்பித்து, தற்போது இருவரும் நார்வேயில் வசித்து வருகிறார்.
பதினான்கு ஆண்டுகள் கடந்த பின், இன்று தனது கதை ஒடுக்கப்பட்ட ஆப்கன் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் என்று ரோயா கருதுகிறார்.
ஆப்கானிஸ்தானில், இன்றும் பெண்களின் குரல்கள் ஒடுக்கப்படுகிறது. அவர்கள் ஆண்களின் துணை இல்லாமல் பள்ளிக்கோ அல்லது சாலையில் செல்லவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு