• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

லண்டனில் பெண் மீது தாக்குதல்; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை

Byadmin

Dec 19, 2024


லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான பர்வேஸ் பட்டேல் (வயது 34) என்பவர் கடுமையாக தாக்கியுள்ளதா குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலால் அந்த பெண் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பிய நிலையில், அவருடைய சத்தம் கேட்டு அயலவர்கள், பொலிஸாருக்கு அறிவித்து உள்ளனர்.

இதனையடுத்து பெருநகர பொலிஸார் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்தனர்.

“பட்டேல், பாலியல் தொழிலாளி ஒருவரை வாடகைக்கு முன்பதிவு செய்து விட்டு, அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில், 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை பட்டேல் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், அந்த பெண்ணின் மூக்கு பாதிக்கப்பட்டு உள்ளது” என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் அண்மையில் நடந்த 3 வார கால தொடர் விசாரணை முடிவில், பட்டேலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பட்டேல் மீது பாலியல் பலாத்கார முயற்சி, கொலை மிரட்டல், உடலுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானதுடன், உடலுக்கு தீங்கு விளைவித்தல் பிரிவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவர், மற்ற பிரிவுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin