லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக ஐரோப்பாவின் பரபரப்பான இந்த விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த தீ காரணமான, விமான நிலையத்தின் 2 மற்றும் 4-ஆம் முனையத்தில் மின்சாரம் தடைப்பட்டது. மேலும் அருகில் உள்ள 5000 வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று எந்த விமானச் சேவையும் நடைபெறாது எனக் கூறியுள்ள ஹீத்ரோ, மேலும் சில நாட்களுக்கு விமானச் சேவை பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது.
தீவிரவாத தடுப்பு காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சதித்திட்டம் குறித்த அறிகுறி தற்போது தென்படவில்லை என லண்டன் மாநகர காவல்துறை கூறியுள்ளது.