• Tue. Oct 15th, 2024

24×7 Live News

Apdin News

லவ் ஜிகாத் என்பது என்ன? உத்தரபிரதேச நீதிமன்ற விளக்கம் பற்றி சட்ட நிபுணர்கள் கருத்து

Byadmin

Oct 15, 2024


லவ் ஜிஹாத் - உ.பி. நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது, ​​உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றம், “இது ஸ்பான்சர் செய்யப்பட்ட ‘லவ் ஜிஹாத்’ வழக்கு, இதில் வெளிநாட்டு நிதியின் பங்கு இருப்பதை நிராகரிக்க முடியாது என்று கூறியது.இந்த தீர்ப்பை கூடுதல் மாவட்ட நீதிபதி ரவி குமார் திவாகர் பிறப்பித்துள்ளார்.

மதத்தை மறைத்து திருமணம் செய்த வழக்கில் பரேலி விரைவு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு பற்றி சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில், ‘லவ் ஜிஹாத்’ என்பதற்கு நிலையான சட்ட வரையறை இல்லை என்று மத்திய அரசு கூறியது. 2020 ஆம் ஆண்டில், மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போதைய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, அரசியலமைப்பின் 25 வது பிரிவை மேற்கோள் காட்டி, இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது என்று கூறியிருந்தார்.

லவ் ஜிஹாத் - உ.பி. நீதிமன்றம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘லவ் ஜிஹாத்’ என்பதற்கு சட்டப்பூர்வ வரையறை இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

By admin