• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

லவ் யூ: ஏ.ஐ மூலம் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரான முழுநீள திரைப்படம் – சினிமாவில் என்ன மாற்றம் வரும்?

Byadmin

May 21, 2025


செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம், Nutan Audio Kannada

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் ‘லவ் யூ’

செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது.

அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. ‘லவ் யூ’ எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையமைத்த 12 பாடல்களும் உள்ளன. கதாநாயகன், கதாநாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் ஏஐ உருவாக்கியவையே.

இந்தியத் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல, ஆனால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு, மத்திய அரசின் தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு வெளியானது, சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இத்தகைய ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், திரைப்படத்துறையில் என்ன மாற்றங்களை கொண்டுவரும்? வழக்கமான திரைப்படங்களுக்கு ஈடாக, மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்களா?

By admin