• Mon. Jan 13th, 2025

24×7 Live News

Apdin News

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: ஏற்படக் காரணம் என்ன? தொடர்ந்து எரிவது ஏன்? எளிய விளக்கம்

Byadmin

Jan 12, 2025


லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: ஏற்படக் காரணம் என்ன? எங்கெல்லாம் பரவியுள்ளது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலிஸில் எரிந்த இடிபாடுகளுக்கு இடையில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம் 16 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீயையும் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றிலேயே மிகவும் அழிவுகரமான காட்டுத்தீக்குப் பிறகு, எரிந்த இடிபாடுகளில் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தையே கலங்கச் செய்துள்ள காட்டுத்தீயின் சமீபத்திய நிலவரம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

By admin