4
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் உதவியளித்துள்ளனர்.
World Central Kitchen எனும் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவசரக்கால குழுக்களுக்கும் இலவச உணவை வழங்கி வருகிறது.
இதனூடாக ஹேரியும் மேகனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பார்சல்களைக் கொடுத்து உதவியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இருவரும் பொதுமக்களைக் கட்டியணைத்து, தமது ஆதரவு தெரிவித்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
காட்டுத்தீயினால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், பசடெனா மாநாட்டு நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹேரியும் மேகனும் அங்குச் சென்று பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
இளவரசர் ஹேரி – மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகி, இங்கிலாந்தை விட்டு வெளியேறி நீண்ட காலமாக அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.