• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

லெஜென்ட்ஸ் லீக்: பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்

Byadmin

Jul 31, 2025


2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜென்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளனர்.

இந்நிலையில் முதல் அரையிறுதியில் இந்தியா- பாகிஸ்தான் மோதவிருந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி அரையிறுதியில் விளையாடமலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக, ஜுலை 20-ம் தேதி நடக்கவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விளையாட ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

By admin