• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

லெபனான்: மத்திய கிழக்கில் மேலும் ஒரு நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் – என்ன நடக்கிறது?

Byadmin

Mar 2, 2026


லெபனான் - இஸ்ரேல், ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Reuters

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரானைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலை நோக்கிய ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஒரு அறிக்கை கூறுகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நேரில் கண்ட சாட்கிளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் மீது தாக்குதல்

பெய்ரூட்டில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு சற்று முன்பு தொடர் வெடிப்புச் சத்தங்களால் மக்கள் விழித்துக் கொண்டனர். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக்குழு வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அதன் இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புகை மூட்டங்கள் எழுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்டுகிறது.

By admin