• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

லெபிடோப்டெரா கம்பளிப் புழு: உயிர்காக்கும் மருந்துகளை உருவாக்க விஷமுள்ள இவை உதவுமா?

Byadmin

Jan 27, 2025


கம்பளிப் புழுக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் உள்ளடக்கிய லெபிடோப்டெராவின் முட்டைப்புழு நிலைதான் கம்பளிப்புழுக்கள்.

கம்பளிப் புழுக்களில் சில இனங்கள் விஷமுள்ளவையாக இருக்கின்றன. அவற்றை பயன்படுத்துவது புதிய மருந்துகளை உருவாக்க பயன்படக் கூடும்.

விஷமுள்ள விலங்குகள் குறித்து நீங்கள் சிந்தித்தால் முதலில் மனதில் தோன்றுவதில் கம்பளிப் புழுக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. பாம்புகள் நிச்சயமாக தோன்றும். தேள்களும், சிலந்திகளும் கூட. ஆனால் கம்பளிப் புழுக்களா?

உண்மைதான். இவ்வுலகில் பல நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான விஷமுள்ள கம்பளிப் புழுக்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றின் விஷம் ஒரு மனிதனை கொல்லக்கூடிய அளவு அல்லது நிரந்தரமாக காயப்படுத்தும் அளவு வீரியம் மிக்கதாக இருக்கிறது. விஞ்ஞானிகள் கம்பளிப் புழுக்களை ஆய்வதற்கு இது மட்டுமே காரணமாகிறது.

ஆனால் கம்பளிப் புழுக்களிடம் சுரக்கும் விஷத்தில் மருத்துவ ரீதியாக பயன்படக்கூடிய பொருட்கள் இருக்கின்றன.



By admin