• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

Byadmin

Aug 17, 2025


தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ் ‘படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர்கள் ஜோர்ஜ் பிலிப் ரே- சந்தீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ எனும் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் நிவின் பாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆனந்த் சி.சந்திரன் மற்றும் ஷினோஸ் ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் வர்கீஸ் மற்றும் சிபி மேத்யூ அலெக்ஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை மேவெரிக் மூவீஸ் – பாலி ஜூனியர் பிக்சர்ஸ் – ரவுடி பிக்சர்ஸ் – ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நயன்தாரா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பதும்,  நிவின்பாலியை விசாரிக்கும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்… ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ஏராளமான புது முகங்களும் திரையில் தோன்றுவதால் ரசிகர்களுக்கு புது அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin