0
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஸாஹிரா, கேட்வே, றோயல், ஹமீத் அல் ஹுசெய்னி ஆகிய அணிகள் கால் இறுதிகளில் வெற்றிபெற்று அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
சிட்டி லீக் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியை 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸாஹிரா கல்லூரி வெற்றிகொண்டது.
இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் மிகத் திறமையாக ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடியன.
முதலாவது பகுதியின் 30ஆவது நிமிடத்தில் எப்.ஆர்.எவ். அஹமத் கோல் போட்டு ஸாஹிராவை முன்னிலையில் இட்டார்.


இடைவேளையின் பின்னர் 57ஆவது நிமிடத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி வீரர் ஏ. குறியாளன் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
சுமார் 20 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் அவர் கோல் போட்டார்.
போட்டியின் 78ஆவது நிமிடத்தில் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் பின்கள வீரர் எஸ். மாதுளன் தனது கோல் வாயிலில் வைத்து பந்தை கையால் தடுத்ததால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இல்கானதுடன் ஸாஹிராவுக்கு பெனல்டி ஒன்றும் வழங்கப்பட்டது.
பெனல்டியை எம். எச். அப்துல்லா கோலாக்கியதுடன் ஸாஹிராவின் ஆதிக்கம் வலுவடைந்தது.
பெறுமதிவாய்ந்த வீரர்: எம். கதீம்


அதன் பின்னர் எம். எச். அப்துல்லா (82 நி.), எம்.கே.எம். ஹிப்னி (85 நி., 90 + 2 நி.) ஆகியோர் மேலும் 3 கொல்களைப் போட்டனர்.
இறுதியில் ஸாஹிரா 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கேட்வே கல்லூரி கடைசிக் கட்டத்தில் போட்ட கோலின் மூலம் வெற்றிபெற்றது.


பெறுமதிவாய்ந்த வீரர்: நடால் சேனபால (கேட்வே)


கேட்வே சார்பாக 89ஆவது நிமிடத்தில் ஏய்டன் பெரேரா
இதனைத் தொடர்ந்து பிற்பகல் நடைபெற்ற இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் றோயல் கல்லூரியும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியும் பெனல்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
புனித சூசையப்பர் கல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையிலான 3ஆவது கால் இறுதிப் போட்டி கோல்களின்றி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.


பெறுமதிவாய்ந்த வீரர்: அஸ்மான் கான் ( றோயல்)


இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் றோயல் கல்லூரி 5 – 4 என வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரிக்கும் தாருஸ்ஸலாம் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளாலும் கோல் போடும் வாய்ப்புகள் தவறவிடப்பட இறதியில் போட்டி வெற்றிதோல்வின்றி முடிவடைந்தது.


பெறுமதிவாய்ந்த வீரர்: எம். சய்த் (ஹமீத் அல் ஹுசெய்னி)


இதனைத் தொடர்ந்து அரை இருட்டில் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 – 0 என ஹமீத் அல் ஹுசெய்னி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டி முடிவுகளை அடுத்து அரை இறுதிப் போட்டிகள் கொம்பனித் தெரு சிட்டி லீக் திடலில் நாளை பிற்பகல் நடைபெறவள்ளது.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஸாஹிரா – கேட்வே அணிகளும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் றோயல் – ஹமீத் அல் ஹுசெய்னி அணிகளும் மோதவுள்ளன.