• Thu. Oct 31st, 2024

24×7 Live News

Apdin News

லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் ‘பென்ஸ்’ ஆக இணைந்த ராகவா லோரன்ஸ்

Byadmin

Oct 31, 2024


முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பற்றிய அறிமுக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

போதை பொருள் மாஃபியாவை பற்றி தன்னுடைய தனித்துவமான பாணியில் படைப்புகளை வழங்கி ரசிகர்களை கவர்ந்திருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் ஜி ஸ்குவாட் எனும் பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனூடாக ‘ஃபைட் கிளப்’ எனும் திரைப்படத்தினை தயாரித்து வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது ‘பென்ஸ்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இவருடன் ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த நிறுவனம் சார்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பற்றிய அறிமுகத்தை காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது.‌

ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவர் லோகேஷ் கனகராஜின் பிரத்யேகமான படைப்புலகத்தில் பென்ஸாக நுழைந்திருக்கிறார்.

மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளியின் இறுதியில் ராகவா லோரன்ஸ் கையில் ஆயுதத்துடன் மூர்க்கத்தனமாக தோன்றுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

By admin