• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

வக்ஃப் நில சர்ச்சையால் தவிக்கும் தருமபுரி மக்கள் – வாரிய தலைவர் பிபிசி தமிழிடம் சொன்னது என்ன?

Byadmin

Aug 18, 2025


 வக்ஃப் நில சர்ச்சை, தருமபுரி, தமிழ்நாடு, சட்டம்
படக்குறிப்பு, வக்ஃப் நிலங்கள் எனக் கூறி யாரும் தடை கோரியதாக எந்த விவரங்களும் அரசிடம் இல்லை என்கிறார் செட்டிக்கரையில் வசிக்கும் ராமசாமி.

“என் மகன் +2 முடித்துவிட்டு கல்லூரி செல்ல உள்ளதால், எனக்கு சொந்தமான 4 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்தேன். ‘இந்த நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது’ எனக் கூறி பத்திரப்பதிவை முடக்கிவிட்டனர். இதனால் எங்கள் வாழ்வாதாரமே முடங்கிவிட்டது” எனக் கூறுகிறார், கீதா.

தருமபுரி மாவட்டம், செட்டிக்குளம் ஊராட்சியில் கீதாவை போல சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் நிலங்களின் மீது எந்தவித உரிமையும் கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 17 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தரவுள்ளதால், அவரிடம் முறையிட உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். செட்டிக்கரை ஊராட்சியில் என்ன பிரச்னை? தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் விளக்கம் என்ன?

தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் செட்டிக்கரை ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் அவை சார்ந்த தொழில்களே இந்தக் கிராமத்தில் பிரதானமாக உள்ளன.

By admin