• Sun. Oct 25th, 2026

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் உருவாகும் புயல்: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை?

Byadmin

Oct 25, 2026


வங்கக்கடலில் உருவாகும் புயல்: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - சென்னையில் மழை எப்படி இருக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக்டோபர் 26-ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என்றும், அக்டோபர் 28-ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக ஆந்திர பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் (அக்டோபர் 25) கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் புயல் எப்போது உருவாகும்? எங்கு கரையைக் கடக்கும்?

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனிக்கிழமை (அக்டோபர் 24) மாலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.



By admin