• Thu. Oct 23rd, 2025

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் | Deep depression over Bay of Bengal weakens Meteorological Department

Byadmin

Oct 23, 2025


சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்கே நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கர்நாடக பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்​டலத் தலை​வர் பி.அ​முதா வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, தமிழக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் நில​வு​கிறது. இது காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக தீவிரமடைய வாய்ப்பு இல்​லை. ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாகவே இன்று (அக்​.23) வட தமிழகம், புதுச்​சேரி, தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களை கடந்து செல்​லக்​கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையாததால், நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



By admin