பட மூலாதாரம், Getty Images
வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை (நவம்பர் 19-ஆம் தேதி) மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று காலை 08:30 மணி முதல் இரவு 07:30 மணி வரையில் அதிகபட்சமாக தென்காசியில் 6.4 செமீ மழையும் திருநெல்வேலியில் 2.7 செமீ மழையும் திருவாரூரில் 2.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
நாளை தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கரையை ஒட்டிய பகுதிகளில் 40 – 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காற்று 60 கிமீ வரை செல்லக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.