• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Byadmin

Nov 5, 2026


வங்கக்கடலில் வருகிற 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், வருகிற 13-ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin