• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை – இந்தியா கூறியது என்ன?

Byadmin

May 18, 2025


ஷேக் ஹசீனா, வங்கதேசம், அவாமி லீக், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி, இந்தியா

பட மூலாதாரம், Ahmed Salahuddin/NurPhoto via Getty Image

படக்குறிப்பு, அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டதை ஒரு தரப்பினர் கொண்டாடுகின்றனர்

  • எழுதியவர், சல்மான் ராவி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்வதாக, வங்கதேசத்தின் இடைக்கால அரசு கடந்த வாரம் அறிவித்தது.

அவாமி லீக் கட்சியை தடை செய்யும் முடிவு இடைக்கால அரசின் ஆலோசனைக்குழு பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது.

அவாமி லீக்கின் மாணவர் பிரிவான சாத்ரா அவாமி லீக் கடந்த ஆண்டே தடை செய்யப்பட்டு விட்டது.

இந்த சூழலில் வங்கதேச அரசியலை நீண்டகாலமாக கவனித்து வரும் நிபுணர்கள் இதனை ‘அரசியல் நெருக்கடி’ என கருதுகின்றனர்.

By admin