• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்துக்கு அமெரிக்கா பூஜ்ஜிய வரி சலுகை – கோவை, திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களைப் பாதிக்குமா?

Byadmin

Feb 18, 2026


இந்தியா, தமிழ்நாடு, ஜவுளித்துறை, அமெரிக்கா, வங்கதேசம்

இந்தியாவைப் போன்றே வங்கதேசத்துடனும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதில் வங்கதேசத்தின் சில ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கு பூஜ்யம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய ஜவுளித்துறையை பாதிக்கக் கூடும் என்கிற கவலை எழுந்துள்ளது.

குறிப்பிட்ட ஆடை ஏற்றுமதிகளுக்கு வங்கதேசம் பூஜ்ஜிய வரியையும் ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கான அனைத்து ஆடை ஏற்றுமதிகளுக்கும் 18% வரியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறுகிறார் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரா.

ஆனால் இது இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம்.

“இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்களால் நமக்கான ஆர்டர்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தியா ஜவுளித்துறை மூலப்பொருட்களின் ஏற்றுமதியை குறைக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

By admin