• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம் – இந்தியா: மோதி அழைப்பை ஏற்க தாரிக் ரஹ்மான் தயங்குவது ஏன்? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Feb 18, 2026


 தாரிக் ரஹ்மான்

பட மூலாதாரம், @bdbnp78

படக்குறிப்பு, வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

வங்கதேசத்தில் அவாமி லீக் இல்லாத தேர்தலும் பிஎன்பி ஆட்சிக்கு வருவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டன.

இப்போது இந்தியா தாரிக் ரஹ்மானையும் அவரது வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வருவதையும் வரவேற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது போல் தெரிகிறது.

அவாமி லீக் இல்லாமல் வங்கதேசத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கும் இந்தியா எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இந்தியா அவாமி லீக்கை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இது 2024 ஜூலை மாதத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியின் போது இந்தியாவின் நிலைப்பாடு மூலோபாய ரீதியாக தவறானது என்ற செய்தியைத் தருகிறதா?

இது வங்கதேச தேசியவாதக் கட்சியைப் (பிஎன்பி) பற்றியது மட்டுமல்ல.

By admin