• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: கலிலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பிஎன்பி கட்சியினரே வியப்படைவது ஏன்?

Byadmin

Feb 20, 2026


கலிலூர் ரஹ்மான்

பட மூலாதாரம், Former CA press wing

படக்குறிப்பு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய கலிலூர் ரஹ்மான், தற்போது பிஎன்பி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.

வங்கதேசத்தில் சமீபத்தில் விடைபெற்ற இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வகித்த கலிலூர் ரஹ்மானை, புதிய பிஎன்பி அரசாங்கம் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.

இந்த முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன.

ரஹ்மானை வெளியுறவு அமைச்சராக நியமித்த முடிவு தங்களுக்கு சங்கடத்தையும் அசௌகரியத்தையும் அளிப்பதாக பிஎன்பி-யின் சில தலைவர்கள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன, ஏனெனில் 18 மாத கால இடைக்கால அரசாங்கத்தில் பலமுறை கலிலூர் ரஹ்மானின் பங்கு குறித்து விவாதங்களும் சர்ச்சைகளும் ஏற்பட்டன.

By admin