• Mon. Jun 1st, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம் திரும்ப இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் – மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?

Byadmin

Jun 1, 2026


இந்தியா - வங்கதேசம், மேற்கு வங்கம், வங்கதேச சட்டவிரோத குடியேறிகள்

பட மூலாதாரம், Uttarayan Chakraborty/BBC

படக்குறிப்பு, மேற்கு வங்கத்தில் உள்ள ஹக்கிம்பூர் என்ற இடத்தில் வங்கதேசத்துக்குத் திரும்புவதற்காக தினசரி பெருந்திரளான மக்கள் கூடுகின்றனர்.

    • எழுதியவர், அமிதாப் பட்டாசாலி
    • பதவி, பிபிசி வங்க மொழி சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சட்டவிரோத வழிகள் மூலம் இந்தியாவுக்கு வந்தவர்கள், ‘தாங்களாகவே முன்வந்து’ திரும்பிச் செல்ல விரும்பினால், அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, தினமும் ஏராளமானோர் எல்லையைக் கடந்து, வங்கதேசத்துக்குள் நுழைவதற்காக மேற்கு வங்கத்தின் சட்கிரா மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் எல்லைப் பகுதிகளை வந்தடைகின்றனர்.

இந்த எல்லையில்தான் நான் பச்சு முன்ஷியை சந்தித்தேன்.

அவர் கூறுகையில், “எனக்கு சுமார் பத்து வயதாக இருந்தபோது, ​​என் பெற்றோரின் கைகளைப் பிடித்துக்கொண்டு நான் இந்தியா வந்தேன். ஏறக்குறைய 38 ஆண்டுகள் கடந்துவிட்டன; நான் இங்கேயே திருமணம் செய்துகொண்டேன், குழந்தைகளைப் பெற்றெடுத்தேன். அவர்களுக்கும் இங்கேயே திருமணம் செய்துவைத்தேன்” என்கிறார்.

கொல்கத்தாவின் டம் டம் விமான நிலையத்துக்கு அருகே வசிப்பதாக பச்சு முன்ஷி தெரிவித்தார். வங்கதேசத்தின் சட்கிரா மாவட்டத்தை ஒட்டியுள்ள, வடக்கு 24 பர்கானாஸில் அமைந்துள்ள ஹக்கிம்பூர் எல்லையைக் கடக்கும் பகுதிக்கு அவர் தனது குடும்பத்தினருடன் வந்தடைந்தார்.

By admin