• Tue. Jun 30th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம் – பாகிஸ்தான் நெருக்கம் அதிகரிப்பது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

Byadmin

Jun 30, 2026


வங்கதேசம்-பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நட்பு இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் புதிய அரசு வந்த பிறகும் பாகிஸ்தானுடனான உறவுகளில் நெருக்கம் அதிகரித்து வருகிறது (அடையாளப் படம்)

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்ற சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

அவர் முதலில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதற்குப் பிறகு அவர் சீனாவிற்குச் சென்றார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசினார்.

இதற்கு முன்பு, தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவில் மேற்கொள்வாரா அல்லது சீனா மற்றும் செளதி அரேபியா போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் மேற்கொள்வாரா என்று பல ஊகங்கள் கிளம்பின. ஆனால் இறுதியில், அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

இப்பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் புதிய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி வங்கதேசம் சென்றடைந்தார். அவர் தரைவழியாக எல்லையைக் கடந்து டாக்கா சென்றார்.

வங்கதேசத்தின் புதிய அரசு மற்றும் இந்தியாவுடனான உறவுகள்

வங்கதேசம்-பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நட்பு இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமா?

பட மூலாதாரம், Tingshu Wang-China Pool/Getty Images

படக்குறிப்பு, வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் ஜூன் 26 அன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பு நடத்தினார்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான சுமார் 55 ஆண்டுகால தூதரக உறவுகளில் முதல்முறையாக, இந்தியா ஒரு அரசியல் நபரை டாக்காவில் தனது பிரதிநிதியாக நியமித்துள்ளது. எனவே இந்த நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

By admin