• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ரோஹிங்யாக்கள் வாழும் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமின் அவல நிலை

Byadmin

Mar 28, 2025


அகதிகள் முகாமில் ரோஹிங்யாக்களின் நிலை

“அன்றைய தினம் எங்கள் கிராமத்தின் மீது குண்டு மழை பொழிந்தது. வெடிகுண்டின் ஒரு பகுதி என் மூன்று வயது மகனின் தொடையில் விழுந்தது. அவன் மயக்கமடைந்தான். மியான்மரில் மருத்துவரிடம் அவனை அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் அவனது காயத்தின் மீது சில இலைகளை வைத்து, அதன் மேல் துணியைக் கட்டி எல்லையைக் கடந்து வங்கதேசத்திற்குள் நுழைந்தோம். அதன் பிறகே சிகிச்சை செய்ய முடிந்தது.”

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் மூங்கில் மற்றும் தார்ப்பாய்களால் ஆன ஒரு தற்காலிக குடிசையில் வசிக்கும் இஸ்மத் ஆரா பிபிசி குழுவிடம் தனது ஆதரவற்ற நிலையின் வலியை வெளிப்படுத்தினார். மகனின் உயிரைp பறித்திருக்கக்கூடிய வெடிகுண்டுத் துண்டின் படத்தை அவர் காட்டினார்.

ஏழு மாதங்களுக்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர்களுடன் மியான்மரின் மவுங்தாவில் (ரக்கைன் மாகாணம்) உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்கு வரவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. மியான்மர், பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடு.

உலகில் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபை கருதும் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்தவர் இஸ்மத் ஆரா. பெரும்பாலான ரோஹிங்யாக்கள் முஸ்லிம்கள். வங்கதேசத்தில் காக்ஸ் பஜாரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான அகதிகளுக்காகk கட்டப்பட்ட 34 முகாம்களில் ஒன்றில் அவர் வசிக்கிறார். இதுதான் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்.

By admin