• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் செயல்பட்ட ரகசிய சிறையில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

Byadmin

Apr 19, 2025


வங்கதேசத்தின் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த ரகசிய சிறை - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், BBC/Aamir Peerzada

  • எழுதியவர், சமீரா ஹுசைன்
  • பதவி, பிபிசி நியூஸ், வங்கதேசத்தில் இருந்து

அவசரமாகக் கட்டப்பட்டிருந்த சுவரை உடைத்தபோது, ரகசிய அறைகள் கொண்ட ஒரு சிறைச்சாலையை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அங்கு புதிதாக செங்கல் வைத்து கட்டப்பட்ட வாசல் இருந்தது. அந்த வாசல் அதன் பின்னால் மறைந்திருப்பதை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது.

அதற்கு உள்ளே, ஒரு குறுகிய நடைபாதையில், இடது மற்றும் வலதுபுறமாகச் சிறிய அறைகள் இருந்தன. அங்கு முற்றிலும் இருட்டாக இருந்தது.

அஹமத் பின் குவாசெம் மற்றும் மற்றவர்களும், அது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவில்லை என்றால், டாக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் இருந்த இந்த ரகசிய சிறையை புலனாய்வாளர்கள் குழுவால் ஒருபோதும் கண்டுபிடித்திருக்க முடியாது.

By admin