• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மரண தண்டனையை எதிர்த்து போராட்டம் – என்ன நடக்கிறது?

Byadmin

Nov 18, 2025


ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை, வங்கதேசம், முகமது யூனுஸ், அவாமி லீக், இந்தியா

பட மூலாதாரம், Reuters

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கூறியது என்ன?

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை அவரது அவாமி லீக் கட்சி விமர்சித்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவு “தீங்கிழைக்கும் மற்றும் பழிவாங்கும் நோக்கில் வந்தது” என்று அக்கட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

“வங்கதேச மக்கள், அவாமி லீக் மற்றும் அனைத்து விடுதலை ஆதரவு சக்திகளும் இந்த முடிவுக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவாமி லீக் கூறியுள்ளது.

இன்று (நவம்பர் 18) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அவாமி லீக் அறிவித்துள்ளது. நவம்பர் 19 முதல் 21 வரை நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களுக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

By admin