• Fri. Nov 8th, 2024

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வருவாரா? அமெரிக்காவில் டிரம்ப் வெற்றியால் மாறும் கணக்குகள்

Byadmin

Nov 8, 2024


டொனால்ட் டிரம்ப் - ஷேக் ஹசீனா, இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த வெற்றிக்கு உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது ஒரு பக்கம் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் மற்றொரு தரப்பு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த பட்டியலில் வங்கதேசமும் ஒன்று.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், அந்த அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

By admin