• Sat. May 24th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேச அரசியலில் புயலை எழுப்பும் முகமது யூனுஸ் ராஜினாமா விவாதம்

Byadmin

May 23, 2025


முகமது யூனுஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ்

வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ் பதவி விலக விரும்புவதாக அறிவித்தது, அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம் வியாழக்கிழமையன்று (22 மே) முகமது யூனுஸை சந்தித்தார்.

“தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து முகமது யூனுஸ் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகுதான் அவரைச் சந்திக்க முடிவு செய்தேன்” என்று நஹித் இஸ்லாம் பிபிசியிடம் தெரிவித்தார்.

மறுபுறம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட இடைக்கால அரசாங்கத்தின் அனைத்து சர்ச்சைக்குரிய ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கோரியது.

By admin