• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார் – அவரது அரசியல் பின்னணி என்ன?

Byadmin

Dec 30, 2025


வங்கதேசம், கலீதா ஜியா மறைவு

பட மூலாதாரம், Getty Images

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (30-12-2025 செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஊடகப் பிரிவு அவரது மரணத்தை ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.

“பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்,” என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25-ஆம் தேதி லண்டனிலிருந்து டாக்கா திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கலீதா ஜியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கலீதா ஜியா டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மாத தொடக்கத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது உடல்நலனுக்காகப் பிரார்த்தனை செய்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தார்.

By admin