• Thu. Mar 13th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேச ராணுவத்தில் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததா? உண்மை என்ன?

Byadmin

Mar 13, 2025


வங்கதேசம், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள், ஷேக் ஹசீனா, முஜிபுர் ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி ஏற்பட்டதாக இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நாளிதழான எகனாமிக் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.

வங்கதேச ராணுவத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஃபைசூர் ரஹ்மான் வேறு சில ஜெனரல்களின் ஆதரவுடன் தற்போதைய ராணுவத் தளபதியாகச் செயல்பட்டு வரும் வகார் உஸ் ஜமானை நீக்க முயன்றதாகவும், ஆனால் போதிய ஆதரவில்லாத காரணத்தால் தோல்வியடைந்ததாகவுவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என வங்கதேச ராணுவம் இப்போது நிராகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, வங்கதேசத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டரேட் (ISRP) இந்தச் செய்திக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அறிக்கை வெளியிட்ட ஐஎஸ்பிஆர்

“இந்தியாவில் உள்ள ஊடகங்கள் சிலவற்றில் வெளியான ஆதாரமற்ற செய்திகள் வங்கதேச ராணுவத்தின் கவனத்திற்கு வந்தது. ராணுவத்திற்குள் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது,” என ஐஎஸ்பிஆர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

By admin