0
வடகொரியாவில் ஆங்கில சொற்களுக்கான தடை பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், Hamburger, Ice cream மற்றும் Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.
சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தளங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வழிகாட்டிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா, உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனக்கென தனி சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ளது.
கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார்.
வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளைக் கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.
மேலும், வடகொரியாவில் வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அது தெரியவந்தது.
வாழ்க்கையின் எல்லாப் பக்கத்திலும் மனித உரிமை கட்டுப்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலம் தெரிவித்தது.
வடகொரியாவிலிருந்து தப்பிய 300க்கும் மேற்பட்டவர்களை நேர்காணல் எடுத்து மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.