0
வடமேற்கு இலண்டனில் கத்தியால் குத்தப்பட்ட “ஐஸ்கிரீம் மனிதன்” ஷாசாத் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெம்ப்லியில் உள்ள மாங்க்ஸ் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை மாலை 6:10 மணியளவில் பெருநகர பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
அங்கு 38 வயதான ஐஸ்கிரீம் வியாபாரியாக நபர் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்தார்.
இந்தக் கொலையைச் செய்ய சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 31 வயது பெண்ணை, அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
பின்னர் புதன்கிழமை அதிகாலையில் 26 வயது பிறிதொரு நபரையும் கைது செய்தனர். இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பெரு நகர பொலிஸார் தெரிவித்தனர்.
அருகிலுள்ள டோக்கிங்டன் அவென்யூவில் வசிக்கும் அசிம் மஹ்மூத் பட் (வயது 39) , கொலை செய்யப்பட்ட ஷாசாத் கான், அப்பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வதில் பெயர் பெற்றவர் என்று கூறினார்.
பாதிக்கப்பட்டவருடன் தான் சிறுவயது நண்பர் என்றும் அவர் மேலும் கூறினார்.
சம்பவ இடத்தில் பேசிய அவர், “இந்த ஆளை, எங்களுக்குத் தெரியும் – அவர் ஒரு பிரபலமான ஐஸ்கிரீம் பையன். நேற்று அவர் கத்தியால் குத்தப்பட்டார்.
“அவரது சகோதரர்களையும் எனக்குத் தெரியும் – அவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள். நாங்கள் அனைவரும் மாங்க்ஸ் பார்க்கில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவோம்.
“அவர் ஒரு வருடத்திற்கு முன்பு ஐஸ்கிரீம் விற்கத் தொடங்கினார்” என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத இரண்டாவது சாட்சி, புதன்கிழமை அதிகாலையில் ஐஸ்கிரீம் வேன் சம்பவ இடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்.
புதன்கிழமை மதியம் மாங்க்ஸ் பார்க்கில் ஒரு பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் ஒரு நீல தடயவியல் கூடாரமும் பல மெட் அதிகாரிகளும் காணப்பட்டனர்.
“இந்த கற்பனைக்கும் எட்டாத கடினமான நேரத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன” என்று துப்பறியும் தலைவர் லூக் வில்லியம்ஸ் கூறினார்.