• Sat. May 16th, 2026

24×7 Live News

Apdin News

வடிவேலு – பிரபுதேவா இணைந்த ‘பாங்க் பாங்க்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Byadmin

May 16, 2026


‘வைகைப்புயல்’ வடிவேலு – ‘நடனப்புயல்’ பிரபுதேவா இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘பாங்க் பாங்க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாங்க் பாங்க்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா – வடிவேலு ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். H.C. வேணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜோம்பி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin