வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா 1490ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும்.
அதில் சிங்கம் உலாவிடம் (லயன் சபாரி) பூங்கா சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லயன் சபாரிக்காக கூண்டு பொருத்தப்பட்ட வாக னத்தில் பொதுமக்கள் அழைத்து செல்லப் பட்டு, இயற்கைச் சூழலில் உலவும் சிங்கங் களைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் 3 ஆண் மற்றும் 4 பெண் என 7 சிங்கங்கள் உள்ளன.
இந்நிலையில் ஷங்கர் என்ற ஆண் சிங்கத் துக்கு, வயதாகிவிட்டதால், அந்த சிங்கத்துக்கு பதிலாக, கர்நாடகாவில் உள்ள பன்னார் கட்டா உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கு கள் பரிமாற்றம் அடிப்படையில் ஷெரியார் என்ற ஆண் சிங்கம் புதிதாக இங்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை யில் ஷெரியார் சிங்கம், கூண்டிலிருந்து திறந்து விடப்பட்டு, சிங்கம் உலா பூங்கா வில் பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டது.
அவ்வாறு திறந்து விடப்பட்ட ஷெரி யார் சனிக்கிழமை மாலை வரை கூண்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் பரபரப்பு அடைந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் சிங்கத்தை ட்ரோன் மூலம் தேடும் முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிங் கம், பூங்கா வளாகத்தை விட்டு வெளியில் எங்கும் போகவில்லை. பூங்காவுக்குள்தான் இருக்கிறது.
ஏற்கெனவே புவனா என்ற பெண் சிங்கம், இதைப்போல் காணாமல் போய், 3 நாட்கள் கழித்து, அதுவாகவே உணவு சாப்பிடுவதற்கு வந்துவிட்டது. அதைப் போல் இந்த சிங்கமும் வந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். பூங்கா சுற்றிலும் சுமார் 15 அடி உயரத் துக்கு, இரும்பு வேலிகள் மதில் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் சிங்கம் வெளியில் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை” எனத் தெரிவித்தனர். ஆனாலும் ஆண் சிங்கம் காணாமல் போன சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங் காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.