5
இங்கிலாந்தில் தனியார் வாடகைத் துறையில் நிலவும் நியாயமற்ற பாகுபாடு காரணமாக, பெரும்பாலான இளைஞர்கள் வீடற்ற நிலைக்கு அல்லது பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர் என தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இலண்டன் EveryYouth தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், வீடொன்றை வாடகைக்குப் பெறுவதில் வெற்றி பெற்றாலும், வயது, தொழில் நிலை, குடும்ப உத்தரவாதம் இல்லாமை போன்ற காரணிகளை முன்வைத்து, குத்தகைதாரர்கள் பல இளைஞர்களை நிராகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பான மற்றும் நிலையான குடியிருப்பை பெறுவது இளைஞர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டம் சில குழுக்களுக்கு பாகுபாட்டிற்கு எதிராக புதிய பாதுகாப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இளம் வாடகைதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இது போதுமான அளவு தீர்க்காது போகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வயது அடிப்படையிலான பாகுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக வீட்டு உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிப்பதுடன், வலுவான சட்டப் பாதுகாப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என EveryYouth அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும், வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை விரிவுபடுத்தி, அதன் செயல்பாடுகளை மீளாய்வு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.