• Thu. Apr 24th, 2025

24×7 Live News

Apdin News

வரிகள் சட்டவிரோதமானது; ட்ரம்ப் நிர்வாக கொள்கைக்கு எதிராக 12 வழக்குகள்!

Byadmin

Apr 24, 2025


ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய வர்த்தக கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 12 மாகாணங்கள் நீதிமன்றில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.

“ட்ரம்ப் வகிதித்துள்ள கட்டணக் கொள்கை சட்டவிரோதமானது. இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் ட்ரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

“அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே ஜனாதிபதி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும்.

“எனவே, ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே, மினசோட்டா, நெவாடா, நியூ மெக்ஸிகோ, நியூ யோர்க் மற்றும் வெர்மான்ட் ஆகிய மாநிலங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

By admin