0
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்து வருகிறார்.
இந்நிலையில், இதற்கு அஞ்சி Samsung மற்றும் LG ஆகிய பிரபல நிறுவனங்கள் மெக்சிக்கோவில் தயாரிக்கும் சில வீட்டு உபயோகப் பொருள்களை அமெரிக்காவில் தயாரிப்பது குறித்து யோசித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Samsung நிறுவனம் வாஷிங் மெஷின்களையும், LG நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகளையும் மெக்சிக்கோவிற்குப் பதிலாகத் தத்தம் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் தயாரிப்பது பற்றி சிந்தித்து வருகின்றன.
நிலவரத்தையும், சந்தையின் போக்கையும் கூர்ந்து கவனித்து உரிய முடிவுகளை எடுக்க இரு நிறுவனங்களும் எண்ணுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.