0
அமெரிக்க ஜனாதிபதி விதிக்கும் வரி அச்சம் காணமாக, 25 நாடுகள் அமெரிக்காவுக்கான தபால் சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளன.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இதனை நேரடியாகவே அறிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையை மேற்கோள் காட்டி, NZ போஸ்ட், கடிதங்கள், பாஸ்போர்ட் மற்றும் சட்ட ஆவணங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அத்துடன், “25 உறுப்பு நாடுகளின் தபால் ஆபரேட்டர்கள், குறிப்பாக போக்குவரத்து சேவைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளைக் காரணம் காட்டி, அமெரிக்காவுக்கு வெளிச்செல்லும் தபால் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தமக்கு அறிவித்துள்ளனர்,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (UPU) குறிப்பிட்டுள்ளது.
நீண்டகால சுங்க விதிகளில் வாஷிங்டன் செய்த மாற்றங்களை மேற்கோள் காட்டி, ஆஸ்திரேலியாவின் அரசுக்குச் சொந்தமான தபால் சேவை அமெரிக்காவுக்கு பார்சல் விநியோகங்களை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்தது.