• Wed. Oct 8th, 2025

24×7 Live News

Apdin News

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை | IT raids 30 locations belonging to textile company on tax evasion charges

Byadmin

Oct 8, 2025


சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு சென்​னை, சேலம், ஐதராபாத், பெங்​களூரு, மும்பை உள்பட 200-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் 700-க்​கும் மேற்​பட்ட துணிக்​கடைகள் உள்​ளன. இங்கு விற்​பனை​யாகும் ஆடைகளுக்கு முறை​யாக வரி செலுத்​தாமல், வரி ஏய்ப்பு செய்​வ​தாக வரு​மான வரித்​துறைக்கு புகார்​கள் சென்​றன.

இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள ஜவுளிக்​கடை உரிமை​யாளரின் வீடு, அலு​வல​கங்​கள், நுங்​கம்​பாக்​கம், புரசை​வாக்​கம் உட்பட சென்னை மற்​றும் தமிழகத்​தின் பல்​வேறு இடங்​களில் உள்ள ஜவுளிக்​கடைகள் என 30 இடங்​களில் ஒரே நேரத்​தில் நேற்று வரு​மான வரித்​துறை புல​னாய்வு அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

சோதனை​யின் முடி​வில் பல்​வேறு ஆவணங்​களை அதி​காரி​கள் கைப்​பற்​றிச் சென்​றனர். இதுகுறித்து வரு​மான வரித்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “சோதனை முழு​மை​யாக முடிந்த பின்​னரே, அதில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் உள்​ளிட்​டவை குறித்த விவரங்​கள் வெளி​யிடப்​படும்​” என்​றனர்​.



By admin