3
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வரும் டிரம்ப், அந்நாட்டின் மீது அதீத ஏற்றுமதி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார்.
அத்துடன், பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து உதிரி தொகையை நாட்டு மக்களுக்கே திரும்ப வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தவிர பிற அனைத்து அமெரிக்க மக்களுக்கும் 2 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.
அவற்றை நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதனை சமூக வலைதளமான ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.