• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

வருமான வரி: பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் சாமானியர்களுக்கு எப்படி பயன் தரும்?

Byadmin

Feb 1, 2025


பட்ஜெட் 2025: ரூ.12 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு வருமான வரி கிடையாது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்த பட்ஜெட் உரையின் கடைசி நேரத்தில் தான் வருமான வரி தொடர்பான இந்த அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்.பிக்கள் புன்னகையுடன் மேசையை தட்டி வரவேற்றனர். இந்த அறிவிப்பிலிருந்து நடுத்தர குடும்பத்தினர் பயனடைவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

By admin