• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

வரைவு வாக்காளர் பட்டியல்: பொதுவாக எழும் சந்தேகங்களும், விளக்கமும்

Byadmin

Dec 21, 2025


வரைவு வாக்காளர் பட்டியல்: வீடற்ற நபர்களின் பெயரை சேர்ப்பது எப்படி? கேள்வி - பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலும் நேற்று (டிசம்பர் 19) வெளியாகிவிட்டது.

மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் வரைவுப் பட்டியலை வெளியிட, மாநிலம் முழுமைக்குமான பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தங்களது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது எப்படி, பெயர் நீக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்வது, சேர்க்கப்பட்ட பெயர்களின் விவரங்களில் பிழை இருந்தால் எப்படித் திருத்துவது, வெளியூர்களில் இருப்பவர்களுடைய நிலை என்ன, வீடற்ற நபர்கள் வாக்களிக்கும் தகுதி இருந்தும் முகவரியின்றி இருந்தால் என்ன செய்வது, எனப் பல கேள்விகள் மக்களிடையே காணப்படுகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

By admin